Wednesday, February 2, 2011

ராணுவ வீரன்

மூன்றுவேளை உணவின் போது
மனைவிமக்களை நினைத்த ஏக்கமும்

முழங்காலில் துப்பாக்கி குண்டை
முழுமனதுடன் வாங்கிய பெருமையும்

மூவர்ணக் கொடி முன்னால்
வீரநடை பயின்ற நாட்களும்

வீட்டுப்பற்றை புறந் தள்ளி
நாட்டுப்பற்றை நெஞ்சில் சுமந்ததும்

நினைவுகளில்
வந்து வந்து போகிறது

நிறுவனமொன்றில் காவலாளியாய்
நிற்கும் நேரங்களில்....!

2 comments:

  1. ஒரு தனி மனிதனின் ஏக்கம், வலியை விட ஒரு ராணுவ வீரனின் வலி மதிக்கத்தக்கது. அவனுடைய அழுகுரலோ வெற்றி சரித்திரத்தையோ இந்நாடு அறியாது ஆனாலும் அவன் போரிட மறுப்பதில்லை. ஆனாலும் அவனுள்ளே அவனுக்குண்டான அங்கீகாரம் கிடைக்காத போது...

    ReplyDelete
  2. உலகில் கொடுமையான வலி புறக்கணிப்புக்கு உள்ளாதல். அதிலும் “பல வேடிக்கை மனிதரைப் போலே – நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” என்று உறுதி கொண்டு வாழும், முகம் காட்டாமல் நம்மை காக்கும் ராணுவ வீரர்களை நாம் புறக்கணித்ததால், அவர்களின் தியாகங்களை மறந்ததால், ஒருவனுக்குள் ஏற்பட்ட வலியை,மிகவும் அருமையாக, வலியுடன் உணர்த்தியுள்ளீர்கள்.

    ReplyDelete