Wednesday, February 2, 2011

கண்டுபிடிப்புகள்

அறிவை கண்டுபிடித்துவிட்டு
அப்பாவித்தனங்களை தொலைத்திருக்கிறான்

அணுகுண்டுகளை கண்டுபிடித்துவிட்டு
அடக்குமுறை அபத்தமென்கிறான்

சப்தங்களை கண்டுபிடித்துவிட்டு
அமைதியே ஆனந்தமென்கிறான்

வண்ணங்களை கண்டுபிடித்துவிட்டு
கருமையே கடைசியென்கிறான்

கடவுள்களை கண்டுபிடித்துவிட்டு
அன்பே கடவுளென்கிறான்

எண்களையெல்லாம் கண்டுபிடித்துவிட்டு
சூன்யமே சூத்திரமென்கிறான்

பணத்தை கண்டுபிடித்துவிட்டு
பொருளாதாரத்தைத் தேடுகிறான்

வாழுமுறைமட்டும் கண்டுபிடித்திருந்தால்
வேறெதுவுமே வேண்டியிருந்திருக்காதோ....!

1 comment:

  1. வாழுமுறை கண்டுபிடித்திருந்தால் வாழ்ந்திருப்ப்போமே செக்கு இழுக்கும் செக்கு மாடுகளாக நல்ல வேலை அந்த கூட்டத்தில் நாம் சிக்கவில்லை!

    ReplyDelete