விதைத்ததாகவே முளைத்தபோது
விம்மி வெடித்தேன்...
கதிரை அறுத்துக்கட்டியபோது
கனிந்து சிரித்தேன்...
காயவிட்டு காயப்படுத்தியபோது
கண்விழித்துக் காத்திருந்தேன்...
போரடித்துத் துவைக்கும்போது
போராடியெனை போற்றிவந்தேன்...
உரலிலிட்டு இடிக்கும்போது
ஊமைத்தவம் புரிந்துவந்தேன்...
பட்டைதீட்டி பாலிஷ் செய்தபோது
பொட்டிட்டுத் தயாரானேன்...
வெட்டிவிட்டு - நீ
வேண்டாம் இச்சோறென்று
உதறி யெழுந்தபோதுதான் -
உயிர் துறந்தேன்...
வேண்டாம் இச்சோறென்று உதறி யெழுந்தபோதுதான் -
ReplyDeleteஉயிர் துறந்தேன் இவ்வவரிகள் மிகவும் பாதித்தது. ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய ஒன்று